வலிமை’யுடன் மோதுகிறதா விஷாலின் 'வீரமே வாகை சூடும்.!!

பொங்கல் பண்டிகையொட்டி, அஜித்குமாரின் வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் களமிறங்குகின்றன.

வலிமை’யுடன் மோதுகிறதா விஷாலின்  'வீரமே வாகை சூடும்.!!

பொங்கல் பண்டிகையொட்டி, அஜித்குமாரின் வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் களமிறங்குகின்றன.

ஒமிக்ரான் எதிரொலியாக, தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வருகிற 7ம் தேதி திரைக்கு வரவிருந்த ஆர்.ஆர்.ஆர். , 14ம் தேதி வெளியாக இருந்த பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய படங்களின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் தற்போது ஜனவரி 14ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தோடு, விஷாலின் படம் மோதவுள்ளது.