வேர்ல்டு ஃபேமஸ் ஆன வடிவேலுவின் கேரக்டர் பெயர்.. படத்தின் டைட்டிலாக வைத்த யோகி பாபு..!!!

வேர்ல்டு ஃபேமஸ் ஆன வடிவேலுவின் கேரக்டர் பெயர்.. படத்தின் டைட்டிலாக வைத்த யோகி பாபு..!!!

தமிழ் திரையுலகில் முன்ணனி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.  முன்னணி ஹீரோக்களை விட அதிக படங்களை கைவசம் வைத்துள்ளார் யோகிபாபு.

முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக மட்டும் நடிக்காமல், காமெடியை மையமாக வைத்து உருவாகி வரும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பேய்மாமா எனும் படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுதவிர இளைஞர்களின் ஃபேவரைட் நாயகியான ஓவியாவுடன் இணைந்து ஒரு படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கான்ட்ராக்டர் நேசமணி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் ஸ்வதீஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது