’விக்ரம்’ படத்தின் வசூல் கணிப்பு 100 கோடியாம்; ஆனால் 3 நாள் செய்த சாதனை எவ்வளவு தெரியுமா..?

’விக்ரம்’ திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாளில் செய்த வசூல் குறித்த தகவலை பார்ப்போம்.....

’விக்ரம்’ படத்தின் வசூல் கணிப்பு 100 கோடியாம்; ஆனால் 3 நாள் செய்த சாதனை எவ்வளவு தெரியுமா..?

தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் ஏகப்போக வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் ‘விக்ரம்’ செய்த 3 நாள் வசூல் சாதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளிலும் வெளியான இப்படத்தின், முதல் நாள் வசூலே 40 கோடி என்று செய்திகள் வெளியானது. இதனால் இப்படம் வார இறுதி நாட்களான சனியும், ஞாயிறும் நல்ல வசூல் சாதனையை ஈட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக டிரேடிங் வட்டாரங்கள் கணித்திருந்தன.

ஆனால் கணிப்பையும் மீறி ’விக்ரம்’ உலகம் முழுவதும் 3 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி வசூல் வேட்டையாடி வரும் இப்படம் கமல்ஹாசன் படங்களிலேயே மிக அதிகமான ஓப்பனிங் வசூல் செய்த படம் இது தான் என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இதே ரீதியில் வசூல் சென்றால் இந்த படம் விரைவில் 300 கோடி வசூலை தாண்டும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம் கேஜிஎப் 2 திரைப்படத்தின் சாதனையை 'விக்ரம்’ முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...