விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் டிரைலர் வெளியீடு..!!

விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் டிரைலர் வெளியீடு..!!

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய படம் லாபம். ஷ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு, டி இமான் இசை.

மேலும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன், கலையரசன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அவரது நண்பர் ஆறுமுககுமாரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


இந்நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பொருளாதாரத்தை எடுத்துரைக்கும் வைக்கும் படமாக உருவாகியிருக்கும் லாபம் படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.