பிஸியாக இருந்தாலும் நண்பனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி.. வைரல் புகைப்படம் 

பிஸியாக இருந்தாலும் நண்பனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி.. வைரல் புகைப்படம் 

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் மிகவும் பிசியாக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. என்னதான் மிகவும் பிசியாக நடித்து வந்தாலும் தனது நண்பருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க மறக்கவில்லை.

நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர் தான் நடிகர் விமல். இவருக்குதான் தற்போது நடிகர் விஜய் சேதுபதி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

பசங்க என்ற படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் விமல். அதனை தொடர்ந்து களவாணி என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

களவாணி படத்தில் நடந்தது போலவே இவரது நிஜ வாழ்க்கையிலும் வீட்டை விட்டு ஓடி சென்று தான் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவி ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கடந்த ஆண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து பலரது பாராட்டை பெற்றிருந்தார்.

இந்நிலையில் தான் நடிகர் விமல் சமீபத்தில் அவருடைய மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆச்சரியம் அளிக்கும் விதமாக விமல் மகனின் பிறந்த நாளுக்கு விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.