ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படம்.!!!

ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படம்.!!!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018ல் வெளியான படம் ’96’. இப்படத்தை பிரேம் குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். காதலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதில் ராம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்திருந்தார்கள். சிறுவயது கதாபாத்திரத்தில் கவுரி, ஆதித்யா நடித்திருந்தனர். 

தமிழில் சூப்பர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்தனர். இந்நிலையில், 96 படம் அடுத்ததாக இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. 

இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இப்படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் கபூர் தயாரிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.