திருமண புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர்...!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம் ஜூன் மாதம் 9 ம் தேதி பிரம்மாண்டமாக நடைப்பெற்ற நிலையில் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. அதனையொட்டி, இயக்குனர் விக்னேஷ் சிவன், தங்களுடைய சில திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர்...!

கடந்த 2015 ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவானது. இந்த படத்தின் போது இருவரும் காதலித்துள்ளனர். 6 வருடங்களாக காதலித்து வந்தவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி பலரது மத்தியிலும் பரவி இருந்தது. அதன் பின்னர், இவர்களது திருமணம் இந்த தேதியில் தான், இந்த கோவிலில் தான் என பல வதந்திகள் பரப்பப்பட்டது. அந்த சூழ்நிலையில், திருமணத்திற்கு முன்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்தித்து, ஜூன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷரேடான் கிராண்ட் ரிசார்ட்டில் தங்களது திருமணம் நடைப்பெறும் என அறிவித்தார். அதன்படி, ஜூன் 9 ம் தேதி வெகு விமர்சையாக நடைப்பெற்றது. திருமணத்திற்கு ரஜினி, சூர்யா, ஷாருக்கான் போன்ற பல திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். 

மிகுந்த பாதுக்காப்போடு நடந்த இவர்களது திருமணத்தின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் இவர்களது திருமண காட்சிகள் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் படமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இருவரும் கேரளா, தாய்லாந்து என சுற்றி வந்தனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ளதால், மேலும் சில திருமண புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் விஜய் சேதுபதியோடு அவரது மனைவி ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்களோடு, திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.