சன்னி லியோனுக்கு முதுகில் மசாஜ் செய்துவிடும் நபரின் வீடியோ வைரல்!

நடிகை சன்னி லியோன் தனக்கு முதுகில் மசாஜ் செய்துவிடும் நபரின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால் தற்போது வைரலாகி வருகிறது.

சன்னி லியோனுக்கு முதுகில் மசாஜ் செய்துவிடும் நபரின் வீடியோ வைரல்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக வலம்வரும் நடிகை சன்னி லியோனுக்கு இந்தியா முழுக்கவே ரசிகர் பட்டாளம் அதிகரித்து காணப்படுகிறது. ஆரம்பத்தில் கிளாமர் வேடங்களுக்காக மட்டுமே அறியப்பட்ட இவர் தற்போது கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களில் வரிசைக்கட்டி பிசியாக நடித்துவருகிறார். அதன்படி தமிழில் ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் ரீலிசாக உள்ளது. அதுமட்டுமில்லாமல்  சினிமாவைத் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.

இப்படி சினிமாத்துறையில் பிஸியாக வலம் வரும் இவர், அவ்வப்போது  சோஷியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருவதால், அங்கும் நடிகை சன்னி லியோனை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 52 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள சன்னி லியோன், தனது கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களூக்கு விருந்து அளித்து வருகிறார்.

அந்த வகையில் தனது உதவியாளர் தனது முதுகில் மிஷின் மசாஜ் செய்துவிடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)