”வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்...குஷியில் ரசிகர்கள்!

”வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்...குஷியில் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

”வாரிசு” திரைப்படம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ”வாரிசு”. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது. 

ரஞ்சிதமே பாடல்:

இதனிடையே, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “ரங்சிதமே” பாடல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன் இசையில் நடிகர் விஜயின் குரலில் வெளியான இந்த பாடல், 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்க்கொடி தூக்கிய சங்கம்:

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் “வாரிசு” பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால்,  பொங்கலுக்கு ( தெலுங்கில் சங்கராந்தி) ”வாரிசு” படத்தை தெலுங்கு திரையுலகில் வெளியிட விடமாட்டோம் என எதிர்ப்பு கிளம்பியது. அன்றைய தினம் எங்களுடைய தெலுங்கு படத்தை தான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போர்க்கொடி தூக்கியதாலும், எதிர்ப்பார்த்த அளவுக்கு திரையரங்குகள் கிடைக்காததாலும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியானது.

இதையும் படிக்க: "டும் டும் டும்"....காதல் ஜோடிக்கு எளிமையான முறையில் நடந்து முடிந்த திருமணம்...

அடுத்தடுத்த பிரச்னை:

விஜய் படம் என்றாலே பிரச்சனைக்கு பங்சமே இருக்காது என்பது தெரிந்த ஒன்றே, அதில் “வாரிசு” மட்டும் விதிவிலக்கல்ல. திரையிடுவதில் ஏற்பட்ட பிரச்னையையடுத்து, படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தி வந்தனர். அதன்படி, வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வரும் நிலையில், உரிய அனுமதி பெறாமல் யானைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

படக்குழுவினற்கு நோட்டீஸ்:

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தாக்கியதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பிரச்னையான நிலையில், வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதியின்றி யானையை பயன்படுத்தியது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

படக்குழுவின் முடிவு என்ன?:

“வாரிசு” படத்திற்கு அடுத்தடுத்து வரும் பிரச்னையில் இந்த விவகாரம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், விலங்குகள் நல வாரியத்திற்கு விளக்கம் அளிக்க படக்குழு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியானது. அந்த வகையில் யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தவில்லை எனவும் பூஜைக்கு மட்டுமே அழைத்துவரப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட இருப்பதாகவும், மேலும் யானைகளை வைத்து எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கிராபிக்ஸ் காட்சிகளை சேர்க்கலாமா எனவும் தயாரிப்பு தரப்பு தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு:

இந்நிலையில் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்புகளை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை, வாரிசு படத்தை பிரிட்டனில் விநியோகம் செய்யும் அகிம்சா என்டர்டைன்மென்ட் ”வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்ற அறிவிப்பை சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானதும் ரசிகர்கள் அதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


பட்டு வேட்டியில் பட்டையைக் கிளப்பும் சல்மான் பாய்... ரசிகர்களை சுண்டி இழுக்கும் டீசர்...

சல்மான் கான் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் சல்மான் கான். பாலிவுட் ரசிகர்களால் அன்பாக “பாய் ஜான்” என அழைக்கப்படுவார். பல நாட்களுக்குப் பிறகு ஒரு பெரும் கமெர்சியல் படத்தில் நடித்துள்ள சல்மான், அந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

ஃப்ராத் சம்ஜி இயக்கத்தில், வி. மணிகண்டன் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்திற்கு ஹிமேஷ் ரேஷமியா, ரவி பஸ்ரூர் (கே.ஜி.எஃப் புகழ்), சுக்விந்தர் சிங், தேவிஸ்ரீ பிரசாத், சாஜித் கான், பாயல் தேவ் மற்றும் அமால் மாலிக் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

மேலும் படிக்க | சபரிமலை சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதென்ன.....

 

மேலும் தென்னிந்திய படங்களில் சமீப காலங்களில் சிறப்பாக ஸ்டண்டு இயக்கி வரும் அனல் அரசு தான் இந்த படத்திற்கும் ஸ்டண்டுகள் இயக்கியுள்ளார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், வெங்கடேஷ்-உம் நடித்துள்ளார். அதனால், தென்னிந்தியர்களுக்கு பெருமையான வெள்ளை வேட்டி சட்டையுடன் படு பயங்கரமாக ஆடுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | நண்பனின் இறப்பிற்கு நடிகர் சாந்தனுவின் உருக்கமான பதிவு....

ஆர் டிசி மீடியா - கே கே ஆர் சினிமாஸ் வழங்கும் துர்கா ராம் சௌத்ரி - நீல் சௌத்ரி தயாரித்து இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் படக்குழுவினர் கலந்து கொள்ளும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சுஹாசினி மணிரத்னம், இயக்குநர் கண்ணன், எழுத்தாளர் ஜீவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை கலைராணி,

"தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை மலையாளத்தில் பார்த்து வியந்து போனேன்.  நம்மில் எவ்வளவு பேருக்கு ஆண்களுக்கு கிச்சனுடன் கனெக்சன் இருக்கிறது என்றும், வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்றும் தெரிந்தது.  தற்போது நிறைய ஆண்கள் சமையல் கற்று கொள்வதாகவும், இதை தமிழில் எடுக்கும் போது சந்தோஷமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது" என்று கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்,

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “டிரைவர் ஜமுனா படத்திற்கு தந்த ஆதரவிற்கு நன்றி.  அதே ஆதரவை தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கும் தர வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.  ஆணாதிக்கம் இன்றளவும் உள்ளதா என்ற கேள்விக்கு, “ஆம் உள்ளது.  இதனால் கிராம பெண்கள் நகர பெண்களை விட அதிகமாக பாதிக்கபடுகின்றனர்.” எனக் கூறியுள்ளார்.

கிச்சனில் உங்கள் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு “எனக்கு கிச்சனில் அவர் உதவி செய்ய வேண்டும்.  ” எனப் பதிலளித்துள்ளார்.  சபரிமலையில் பெண்கள் அனுமதி மறுப்பு குறித்து உங்கள் கருத்து என்ற நிரூபரின் கேள்விக்கு, “ஆணும் பெண்ணும் சமம்.  எந்த கடவுளும் யார் யார் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று கூறவில்லை.  அப்படி எதாவது ஒரு கடவுள் கூறியிருந்தால் எனக்கு காட்டுங்கள்.” எனக் கூறியுள்ளார்.

திராவிட ஆட்சியில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு, “பெண்கள் சம உரிமை பெற்றுள்ளனர்  ” எனப் பதிலளித்துள்ளார்.

மேலும் திரைப்படம் பிப்ரவரி 03 வெளியாகவுள்ளதாகவும் அதற்கு முழு ஆதாரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  திமுகவிற்கு பயப்படும் பாஜக..... இடைத்தேர்தலில் போட்டியில்லை!!!

நேற்று இரவு ஒரு அன்பான நண்பரை இழந்தேன்...
 
மிகவும் ஆர்வமுள்ள, திறமையான உதவி இயக்குனர் - 26 வயது… எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை.. ஆனால் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துக் கொண்டார்…
அவர் வேலையின் போது "சரிந்து"...  இறந்துவிட்டார்.

வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றது...வாழ்க்கை மிகவும் அநியாயமானது... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்கு ஒரு கால அவகாசம் கூட வழங்கப்படவில்லை... சில நிமிடங்களில் கீழே இறங்கிச் சென்றுவிட்டார்... மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் இறப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு என்னை அழைத்திருந்தும் என்னால் அவருடன் பேசமுடியவில்லை... நான் அவனுடைய போனை எடுத்திருக்க விரும்புகிறேன்....

நம் வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமற்றது என்பதால் நாம் அனைவரும் ஈகோ வெறுப்பு போன்றவற்றை மறந்து விடுவோம்... மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்..... யாருடனாவது வெறுப்பை வீசுவதை விட புன்னகைப்போம்... மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம் - இதுவே இன்றைய உலகின் மிகப்பெரிய குற்றவாளி... 

நீங்கள் ஏதாவது ஒரு வழியாகச் சென்றால் யாரிடமாவது பேசுங்கள்,  அந்த வலி மற்றும் மன அழுத்தத்தில் நீங்கள் தனியாகச் சென்று விடாதீர்கள்... அது உங்களைத் தின்றுவிடும்...
“என்ன சார் இருக்கு இந்த உலகத்லே…அவ்ளோ எதிர்மறை, வெறுப்பு எதுக்கு..சந்தோஷமா இருங்க, அன்பைப் பரப்புங்க, அதுக்கு ஒண்ணும் செலவில்லை”...-அதுதான் #ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்வது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ராம்சரிதமனாஸ் சர்ச்சை.....கடும் கோபத்தில் பாஜக.... மவுரியா கூறியதென்ன?!!!

‘துணிவு’ படத்துக்காக பலியான மேலும் ஒரு உயிர்...

துணிவு படத்துக்கு அழைத்து செல்லாத காரணத்தால் இளம்சிறுமி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் கடந்த 11-ம் தேதியன்று வெளியான துணிவு திரைப்படம் 10 நாட்களுக்கு மேலாகியும் ஹவுஸ்புல்லாய் ஓடி களை கட்டி வருகிறது. இதற்கிடையே துணிவு படத்திற்காக ஆங்காங்கே ஓரிரு உயிரிழப்பு சம்பவமும் நடப்பதுதான் கரும்புள்ளியாய் அமைந்துள்ளது.  

கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - சித்ரா தம்பதியர். இவர்களுக்கு 19 வயதிலும், 17 வயதிலும் என இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். 

மேலும் படிக்க | பிரான்சில் அஜித் படத்திற்கு அதிக வரவேற்பு... 

திருப்பனந்தாள் பேரூராட்சி உறுப்பினராக செயலாற்றி வரும் சுரேஷ் ஞாயிற்றுக்கிழமையன்று தனது குடும்பத்தினரை அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்ப்பதற்காக நினைத்துள்ளார்.  

துணிவு படத்திற்கு துணிச்சலாக கிளம்பியவர் இளைய மகளை மட்டும் வீட்டிலேயே விட்டு விட்டார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இளையமகள் விரைவில் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு கூறி விட்டார். 

மேலும் படிக்க | விஜய், அஜித் மீது புகாரளித்த சமூக ஆர்வலர்..... 

இதையடுத்து மனைவி, மூத்த மகளை அழைத்துக் கொண்டு துணிவு படம் பார்ப்பதற்கு கிளம்பி விட்டார் சுரேஷ். தன்னை விட்டு சென்று விட்டார்களே என விரக்தியடைந்த சிறுமி, தாயின் புடவையை மின்விசிறியில் மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

துணிவு படத்தை பார்த்து உற்சாகமாக வீடு திரும்பிய சுரேஷ், சித்ரா ஆகியோர் மகள் உயிரிழந்ததைக் கண்டு கதறி அழுதனர். 18 வயதுக்கு கீழ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாலும், அதுவும் ஒரு கொலைதான் என நடிகர் அஜித்தே மற்றொரு திரைப்படத்தில் பேசியிருந்தார். 

மேலும் படிக்க | ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்களின் படம் வெளியாகி, இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரே குஷி... 

ஆனால் அஜித்தின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சிறுமியே, அஜித்தின் துணிவு படத்தை பார்க்க முடியாமல் துணிவின்றி, துணியிலேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார் என்பதுதான் துக்கமான ஒன்றாகும்.  

ஏற்கெனவே துணிவு படத்தின் வெளியீட்டின் போது பரத்குமார் என்ற ரசிகர் கீழே விழுந்து பலியானது, இரண்டாவது தூத்துக்குடி வீரபாகு இவர்களுக்கு அடுத்தபடியாக பள்ளி மாணவியும் பட்டியலில் இணைந்திருக்கிறார்.  

மேலும் படிக்க | ‘வாரிசு’ பட கொண்டாட்டத்தின் போது பலூன் வெடித்து விபத்து... 

 

பிரான்சில் அஜித் படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதாக அந்த நாட்டு தொலைக்காட்சியில் கலந்துரையாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிரான்ஸின் முக்கிய நகர்களில் பிரெஞ்ச் படங்களைவிட துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அஜித்குமாருக்கு பாரீஸில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வாடகை தாய் குறித்து பிரியங்கா சோப்ரா விளக்கம்...

இவ்வளவு நாட்கள் துணிவு படம் ஹவுஸ்புல் காட்சிகளில் ஓடுவது மிகப்பெரிய விஷயம் எனவும் பிரான்ஸ் தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

போனிகப்பூர் தயாரிப்பில் எச்.  விநோத் இயக்கத்தில் அஜித் மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ள துணிவு படத்தினை ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் பெற்ற வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், உலகளவிலும் இந்த படம் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது ரசிகர்களுக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் வரலாறு திரிக்கப்பட்ட படம்- படத்திற்கு எதிரான வழக்கு...