அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதையடுத்து ’வலிமை’ படத்தினை எதிர்நோக்கி காத்துகொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.