61 வயது நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா.. யார் அந்த பிரபலம்

61 வயது நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா.. யார் அந்த பிரபலம்

தமிழ் சினிமாவில் இன்றும் முன்ணனி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் கல்லூரியில் படிக்கும் காலங்களில் மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார். அந்த ஆர்வத்தினால் மிஸ் சேலம் போட்டியில் வெற்றி பெற்றார். அதையடுத்து மிஸ் சென்னை போட்டியில் சிறந்த சிறப்பு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார் .

ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திரிஷா. பின்பு லேசா லேசா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் . 
ஆனால் மௌனம் பேசியதே திரைப்படம் தான் முதலில் வெளி வந்து, திரிஷாவின் முதல் திரைப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார் திரிஷா.

Nandamuri Balakrishna filmography - Wikipedia

தற்போது தெலுங்கில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் திரிஷா. தற்போது கோபிசந்த் இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளனர். அவர் பல படங்களில் பிசியாக இருந்ததால் மறுத்துவிட்டார். பின் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனராம்.

பாலகிருஷ்ணாவுக்கு 61 வயது ஆன நிலையில் அவருடன் கதாநாயகியாக நடிப்பதற்கு திரிஷா ஒப்புக்கொண்டு விட்டார்.