வெளியானது அதர்வா நடிப்பில் உருவான குருதி ஆட்டம் படத்தின் ட்ரைலர்..!

வெளியானது அதர்வா நடிப்பில் உருவான குருதி ஆட்டம் படத்தின் ட்ரைலர்..!

பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த அதர்வா, அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், அதர்வா குருதியாட்டம் படத்தில் நடித்துள்ளார். 

படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அது நடந்தேறவில்லை.  

இந்நிலையில் தற்போது, திரைப்படமானது ஆகஸ்ட் 5 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதர்வா, பிரியா பவானி சங்கர் தவிர்த்து படத்தில் ராதா ரவி, ராதிகா,  வாட்சன் சக்ரவர்த்தி, வினோத் சாகர் என பலர் நடித்துள்ளனர்.  ராக்ஃபோர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள, இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபஸ்ட் சிங்கள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அதர்வாவின் மிரட்டலான, மாஸான நடிப்பில் ட்ரைலர் வெளியானது. அதிரடியான சண்டைக்காட்சிகளும், இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.