AK நடிப்பில் மாஸாக வெளியானது...! துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்...!

AK நடிப்பில் மாஸாக வெளியானது...! துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்...!

வலிமை படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் உருவாகும் திரைப்படம் துணிவு. அதாவது வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், இயக்குனர் எச்.வினோத் ஆகியோர் தான் இந்த படத்தையும் தாயாரித்து இயக்கியுள்ளனர்.

வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளின் வெளியாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களை திறந்தாலே வாரிசா துணிவா என்கின்ற செய்திகள் தான் குவிந்துகிடக்கின்றன. மேலும் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் வழக்கம் போல் சண்டையிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுவது தான் இந்த சண்டையின் உச்சக்கட்டம்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது.  துணிவு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் அவர் துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் ஏற்பாடு செய்வார் என்று வெளிப்படையான கருத்துக்கள் பரவி வருகிறது. அதனால் அஜித் ரசிகர்களும் வாரிசு திரைப்படம் அவ்வளவு தான், தியேட்டரே கிடைக்கவில்லை என்று ஒரு கருத்தை பரப்பி வருகின்றனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் துணிவு திரைப்படத்திலிருந்து இன்னும் ஒரு அப்டேட் கூட வரவில்லை எனவும் ஆனால் வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலே வெளியாகிவிட்டது எனவும் சட்டையிட்டு வந்தனர். ஆனால் அதிகாரபூர்வமாக வாரிசு, துணிவு திரைப்படத்திற்கு இன்னும் தியேட்டர்களே ஒதுக்கப்படவில்லை என்ற தகவல்களும் வெளியானது.

இந்நிலையில், தற்போது துணிவு திரைப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. இந்த பாடலை அனிரூத் பாடியுள்ளார். வைஸாக் வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ளது. இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பர்ப்பை அதிகபடுத்தியுள்ளது.

-- சுஜிதா ஜோதி

இதையும் படிக்க : “காய்கறி கமிஷன் மண்டியில் கூடுதல் சுங்க கட்டணம்” - குற்றம் சாட்டும் விவசாயிகள்..!