வில்லனுக்கு “தனுஷ்கோடி” என பெயர் வைக்க இதுதான் ரீசன் -   வெங்கட்பிரபு ஓபன் டாக்...!

மாநாடு திரைப்படத்தில் “தனுஷ்கோடி” என பெயர் வைத்ததற்கான காரணத்தை இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

வில்லனுக்கு “தனுஷ்கோடி” என பெயர் வைக்க இதுதான் ரீசன் -   வெங்கட்பிரபு ஓபன் டாக்...!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படம் கடந்த நவம்பர் 25 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்தப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்தபடத்தை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். டைம் லூப் கான்சேப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பல்வேறு நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தில் வில்லனான எஸ்.ஜே.சூர்யாவுக்கு ““தனுஷ்கோடி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தன்னுடைய மாஸான நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டிருப்பார்  எஸ்.ஜே.சூர்யா.

இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர், ஒரு வலிமையான பெயர் வேண்டும் என்பதால் அந்தப் பெயரைத் தேர்வு செய்தோம் என்றும் ரஜினி - கமல், அஜித் - விஜய் வரிசையில் சிம்பு என்றாலே தனுஷ் பெயர்தான் நினைவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்  அந்தப் பெயர் வைத்தாலே இயல்பாகவே ஒரு பவர் வந்துவிடும். அடிப்படையிலேயே அவர்கள் இருவரும்  நண்பர்கள்தான். இதற்காக கண்டிப்பாக தனுஷே போன் செய்து சந்தோசப்படுவார் என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.