”உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா” - பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக வசனம் பேசியுள்ளாரா நடிகர் விஜய்?

பீஸ்ட் திரைப்படத்தில் இந்திக்கு எதிராக நடிகர் விஜய் பேசியுள்ள வசனம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

”உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா” - பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக வசனம் பேசியுள்ளாரா நடிகர் விஜய்?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலகம் முழுவதும் இன்று வெளியான பீஸ்ட் படத்தில், ஒரு காட்சியில் 'உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா, எல்லா தடவையும் இந்தியை ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டு இருக்க முடியாது’ என்ற வசனத்தை விஜய் பேசியுள்ளார்.

சமீபத்தில், இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும் என்றும், இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இந்தி தொடர்பாக நடிகர் விஜய் பேசியுள்ள வசனம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.