தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...!

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...!

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’ சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசரானது என்று வெளியாகி உள்ளது இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Shooting of Dhanush film 'Captain Miller' stopped by authorities due to  lack of permits | News9live

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள (ரோகினி) திரையரங்கில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் டீசர் காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரவு 12 மணி அளவில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

ரோகிணி திரையரங்கில் சிறப்பு எல்இடி டிஸ்ப்ளே (led display) அமைக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி அளவில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. டீசரை திரையிடும்போது வான வேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் கொண்டாடினர்.அதை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரையரங்கு முன் ஆட்டம் பாட்டத்துடன் கண்டு களித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் வந்து இருந்தார். கேப்டன் மில்லத் திரைப்படத்தின் டீசர் வெளியான பெண் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இன்று நடிகர் தனுஷின் பிறந்த நாளை ஒட்டி ரோகினி திரையரங்கில் கூடி இருந்த  தனுஷ் ரசிகர்கள் அனைவரும் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதையும் படிக்க     | " ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க ' டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் வலியுறுத்தும்" - நடிகர் சந்தானம்.