பிறந்தநாளில் வெளியான லியோ-வின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...கொண்டாடும் ரசிகர்கள்!

பிறந்தநாளில் வெளியான லியோ-வின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் விஜய்-யின் 49-வது பிறந்தநாளை ஒட்டி, லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப் படத்தினை இயக்குநர் லோகோஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில்  நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயின் பிறந்த நாளான இன்று படக்குழு நள்ளிரவு 12 மணியளவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க : நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா் பிரதமர் மோடி...!

இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம், திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் உள்ளிட்ட பல திரையரங்குளில் சிறப்புக்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் லியோ படத்தின் பர்ஸ் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து, திரையரங்கில் ரசிகர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து விஜய் பிறந்தநாளை கொண்டாடினர்.

இதேபோல் சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கில், பர்ஸ் லுக் போஸ்டர் கொண்டாட்டத்தை ரசிகர்கள் தியேட்டர் வாசலில் கொண்டாட முயற்சிக்கும் போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.