விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் புதிய சாதனை.!!

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் புதிய சாதனை.!!

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த மாஸ்டர் தி்ரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடல், படம் வெளியாவதற்கு முன்பாகவே, வைரலாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்த பாடலுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். தற்போது, வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர் களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  கோலிவுட் வரலாற்றில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 3-வது பாடலாக வாத்தி கம்மிங் அமைந்துள்ளது.