இந்தியன் 2 படப்பிடிப்பை நிறுத்திய காவல்துறையினர்!

இந்தியன் 2 படப்பிடிப்பை நிறுத்திய காவல்துறையினர்!

சென்னை விமான நிலையத்தில், நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு அனுமதியின்றி நடந்ததாக கூறி படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர் காவல் துறையினர்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து உள்ளிட்ட பல காரணங்களுக்காக இடையில் நிறுத்தபட்டது. நீண்ட நாட்களுக்குப்பின், நடிகர் கமல் நடிப்பில் வெளி வந்த விக்ரம் படம் வெற்றியடைந்ததால், 
மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னை  பன்னாட்டு விமான நிலையத்தில்  இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.விமான நிலைய ஆணையத்தில் 1.24 கோடி பணம் செலுத்தி அனுமதி பெற்றுள்ளனர் படக்குழுவினர்.

வழக்கம் போல, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற போலீசார் காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் எப்படி படப்பிடிப்பு நடத்துகிறீர்கள் என படப்பிடிப்பு குழுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், சென்னை விமான நிலைய நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ள சான்றிதழ் காண்பிக்குமாறு போலீசார் கேட்டுள்ளனர். இதையடுத்து பட குழு சென்னை விமான நிலையத்தில் அனுமதி பெற்ற சான்றிதழை விமான நிலைய போலீசாரிடம் காண்பித்துள்ளனர்.

இருப்பினும் சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தப்படும் பொழுது பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க காவல்துறை அனுமதி பெற்று அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி காவலர்களை பணியமர்த்த வேண்டும் என பட குழுவிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இததையடுத்து சென்னை விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெற்றுவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்க போலீசார் அனுமதித்துள்ளனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக 1. 24 கோடி கட்டி அனுமதி பெற்றதற்கு ஜி.எஸ்.டி வரியும் படக்குழு செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: https://www.malaimurasu.com/Collector-who-canceled-the-appointment-of-a-disabled-person