லாஸ்லியா-ஹர்பஜன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! நட்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ப்ரண்ட்ஷிப்..!

திரையிலும் சுழற்றி வீசுவாரா ஹர்பஜன் சிங்?

லாஸ்லியா-ஹர்பஜன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! நட்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ப்ரண்ட்ஷிப்..!

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர், அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர். பின்பு ரியாலிட்டு ஷோ மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். ரியாலிட்டி ஷோவில் இவர் இருந்த போதே, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நிச்சயம் லாஸ்லியாவிற்கு எனது படத்தில் வாய்ப்புள்ளது என உறுதியளித்தார். அதன்படி, அவர் இப்போது நடித்து வரும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் லாஸ்லியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் ப்ரண்ட்ஷிப் படத்தில், கதாநாயகியாக நடிக்க லாஸ்லியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்களுடன் சேர்ந்து ஆக்சன் கிங் அர்ஜூன், சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கொரோனா ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது தியேட்டர்களை 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. 

அதனால் ப்ரண்ட்ஷிப் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். தமிழ் மீது அதிக ஆர்வம் உள்ள கிரிக்கெட் வீரர் என்றால் அது ஹர்பஜன் சிங் தான். அவ்வப்போது தமிழில் பல்வேறு ட்விட்களை போட்டு மக்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடிப்பார். நடிப்பிலும் ஆர்வம் கொண்ட அவர், வெப் சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், முதன்முறையாக பிரண்ட்ஷிப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.