1st Time டுவிட்டர் பக்கத்தில் இணைந்த சுதா கொங்கரா... அஜித் ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வி என்ன ? இணையத்தில் வைரல்!!

முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் இணைந்த சுதா கொங்கராவிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

1st Time டுவிட்டர் பக்கத்தில் இணைந்த சுதா கொங்கரா... அஜித் ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வி என்ன ? இணையத்தில் வைரல்!!

சுதா கொங்கரா பிரசாத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு "துரோகி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
அதன்பின் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்ததாக சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கி மிகப்பெரிய அளவில் வெற்றியை ஈட்டினார். 

இப்படி சூப்பர்ஹிட் படங்களை இயக்கி வரும் இயக்குனர் சுதா கொங்கரா நேற்று தான் டுவிட்டர் இணையதளத்தில் முதன் முறையாக இணைந்துள்ளார். கணக்கு தொடங்கிய முதல் நாளே டுவிட்டர் பக்கத்தில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சுதாவின் ட்விட்டர் பக்கத்திற்கு முதல் நாளே புளு டிக் கிடைத்தது வரவேற்க தக்க ஒன்றாக உள்ளது. இதனையடுத்து கணக்கு தொடங்கிய இயக்குனர் சுதா கொங்கரா தனது முதல் டுவிட்டாக, ‘இதுதான் எனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம்’என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த டுவிட்டுக்கு கமெண்ட் செய்துள்ள அஜித் ரசிகர்கள் ‘அஜித் 63’ பட அறிவிப்பை எப்போது வெளியிடுவீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜிவி பிரகாஷ் பேட்டி ஒன்றில் கூறியபோது சுதா கொங்கரா மற்றும் அஜித் ஒரு புதிய படத்தில் இணைவார்கள் என்றும், அஜித்திற்காக ஒரு மிகச் சிறந்த திரைக்கதையை சுதா வைத்துள்ளார் இந்த தகவல் வெளியாகும் போது பிரமிப்பாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை தற்போது பகிர்ந்துள்ள அஜித் ரசிகர்கள், ‘இது எப்போது நிகழும்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். சுதா கொங்காரா இந்த கேள்விக்கு விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.