இயக்குனராகும் பிரபல இசையமைப்பாளர்.. உடனே கால்ஷீட் கொடுத்த டாப்ஸி

இயக்குனராகும் பிரபல இசையமைப்பாளர்.. உடனே கால்ஷீட் கொடுத்த டாப்ஸி

டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அனபெல் சேதுபதி. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. 

டாப்ஸி பொறுத்தவரை எப்போதுமே கதையில் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர்ந்து சம்மதம் தெரிவிப்பார். அதுமட்டுமில்லாமல் டாப்ஸி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருக்கும்.

தற்போது தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான எஸ் ஏ ராஜ்குமார் டாப்சியிடம் ஒரு கதையை பற்றி கூறியுள்ளார். படத்தின் கதையை கேட்ட டாப்ஸி படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் உடனே அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். 

தற்போது தெலுங்கு பக்கம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க ஹாரர் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.