விக்ரமின் ‘மஹான்’ படத்தில் சிம்ரன் கேரக்டர் குறித்து வெளியான புதிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விக்ரமின் ‘மஹான்’ படத்தில் சிம்ரன் கேரக்டர் குறித்து வெளியான புதிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் சியான் விக்ரம். இவர் தனது நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அந்தவகையில் தனது மகன் துருவ் விக்ரம்மையும் தமிழ்சினிமாவிற்குள் கலமிறக்கி உள்ளார். ஏற்கனவே பல வாரிசு நடிகர்கள் நடித்து வரும் வரிசையில் துருவ் விக்ரமும் கடந்த 2019 ஆம் ஆண்டு  இணைந்து நடித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகரும், மகனுமான துருவ் இருவரும் இணைந்து ‘மஹான்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடு உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் சிம்ரன் கதாபத்திரம் குறித்து ஒரு புதிய அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே சிம்ரன் கதாபாத்திரம் தான் படத்தின் திருப்புமுனையாக அமையும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், தற்போது  ‘மஹான்’ படத்தில் சிம்ரன் ‘நாச்சி’ என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் நடித்துள்ள சனத், ராக்கி என்ற கேரக்டரிலும், முத்துக்குமார், ஞானம் என்ற கேரக்டரிலும் நடித்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனுடன்  இந்த மூன்று கேரக்டர்களின் புதிய போஸ்டர்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.