முடிவுற்றது..! திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்...!!

முடிவுற்றது..! திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்...!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு இன்று நடைபெற்ற தேர்தல் முடிவுற்றது.

மொத்தம் 1407 வாக்குகள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள நிலையில் 1111 வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருக்கின்றன. 

ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர் ,ஒரு பொருளாளர், இரண்டு பொதுச் செயலாளர்கள் 26 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி 5 மணியளவில் முடிவுற்றது. இதில் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி ஒரு அணியாகவும் தயாரிப்பாளர் மன்னன் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.

இத்தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் பணியாற்றினர்.

இன்று நடைபெற்ற தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், ஆர்யா, விஜய் சேதுபதி,அதர்வா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல பல முன்னணி இயக்குனர்கள் டி.ராஜேந்திரன், சுந்தர் சி, பார்த்திபன், தங்கர் பச்சான் ஆகியோரும், முன்னணி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, லைகா ஜிகேஎம் தமிழ்குமரன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஸ்வர்யா கல்பாத்தி, ஸ்டுடியோ கிரீன் கேஇ ஞானவேல் ராஜா, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், வேல்ஸ் ஃபிலிம்ஸ் ஐசரி கணேஷ் ஆகிய முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

இந்நிலையில் காலை 9 மணி முதல் துவங்கி நடைபெற்று வந்த இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஆனது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.