”அது கண்ணா இல்ல கரண்ட்டா? கன்ஃபியூசன்” வெளியானது KRK-வின் 3 வது சிங்கிள் பாடல்!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து டிப்பம் டப்பம் என்ற 3 வது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

”அது கண்ணா இல்ல கரண்ட்டா? கன்ஃபியூசன்” வெளியானது KRK-வின் 3 வது சிங்கிள் பாடல்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதனிடையே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது 3 வது சிங்கிள் பாடல் ரிலீஸாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து 2 சிங்கிள் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.

இந்நிலையில் தற்போது 3 - வதாக விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவின் பாடலான இந்த ”டிப்பம் டப்பம்” பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அனிருத் மற்றும் அந்தோணிதாசன் இருவரும் இணைந்து பாடிய இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்களை பார்த்தாலே இப்படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு வெளியான 3 பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.