"நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி" உதயநிதி ஸ்டாலின்!

"நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி" உதயநிதி ஸ்டாலின்!

நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி என நடிகா் உதயநிதி ஸ்டாலின் தொிவித்தார்.  

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படம் இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், படக்குழுவின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின்,  இப்படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலு தான் எனவும் நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.  

இதையும் படிக்க:"பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினாலே அவையை கலைத்து விடுகின்றனர்" கனிமொழி சோமு வருத்தம்!