"பீஸ்ட் ட்ரைலர் சுட்டதா".. எந்த படத்திலிருந்து.. இந்த படத்திலிருந்து - கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!!

எண்ணெங்க சொல்றிங்க பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அந்த படத்தின் காப்பியா என யோசிக்கும் வகையில் நெட்டிசன்கள் புதிதாக ஒரு பிரச்சனையை கொளுத்தி போட்டுள்ளனர்.

"பீஸ்ட் ட்ரைலர் சுட்டதா".. எந்த படத்திலிருந்து.. இந்த படத்திலிருந்து - கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!!

சமீப காலமாகவே சிலர் பெரிய ஹீரோக்களின் படம், பெரிய பட்ஜெட் படம் மீது கதை திருட்டு குற்றசாட்டு வைப்பதும், அந்த படத்தில் வரும் ஏதாவது ஒரு விஷியத்தை வைத்து பிரச்சனையை கிளப்புவது லேட்டஸ்ட் ட்ரெண்டாகி வருகிறது.

வலிமை படத்தில் வரும் சில காட்சிகள் மெட்ரோ படத்தின் காட்சிகள் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கொளுத்தி போட்டு போனார்கள். இது ஒரு பெரிய பிரச்சனையாக போய் இறுதியில் நீதிமன்றம் வரை சென்று முடிந்தது. அந்த வரிசையில் தற்போது பீஸ்ட் படம் இணைந்துள்ளது. அதாவது பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ரிலீசுக்கு முன்பே இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வெளியாகியுள்ளது. பீஸ்ட் டிரைலர் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து ஜெட் விமானத்தை இயக்குவது போல் காட்டப்பட்டுள்ளது.

இந்த ஸ்டில்லும், பிரபல ஹாலிவுட் படமான TOP GUN: Maverick படத்தின் ஸ்டில்லும் ஒரே மாதிரி இருக்கே.. ஒரு வேல அந்த படத்தில் இருந்து தான் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை காப்பி அடிச்சிருப்பாங்களோ என என புதிய பிரச்சனையை நெட்டிசன்கள் கிளப்பி விட்டுள்ளனர்.

1986 ஆம் ஆண்டு வெளியான TOP GUN திரைப்படத்தின் தொடர்ச்சியாக,  TOP GUN: Maverick படத்தில் ஹாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான டாம் குரூஸ் நடித்துள்ளார். இப்படம் மே 27ஆம் தேதி வெளியாகிறது.

TOP GUN: Maverick படமும் இன்னும் வெளியாகவில்லை.. பீஸ்ட் படமும் இன்னும் வெளியவில்லை.. அதுக்குள்ள ஒரு போஸ்டரை வைத்து பீஸ்ட் படத்தின் ட்ரைலர் காப்பி என்று கேட்டு நெட்டிசன்கள் பெரும் சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளனர்.