அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 14-ஆம் தேதி வெளியீடு.....படக்குழு அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படத்தின் டீசர் வரும்  14-ஆம் தேதி வெளியீடு.....படக்குழு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை அன்று படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த, படத்தை விளம்பரப்படுத் துவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல்பார்வை மற்றும் எஸ்.பி.பி பாடிய அண்ணாத்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது . சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டீசரை ஆயுத பூஜையை முன்னிட்டு, அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.