தமிழ் சினிமாவும்... சொகுசு கார் கலாச்சாரமும்!!

தமிழ் சினிமாவும்... சொகுசு கார் கலாச்சாரமும்!!

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் நடிகர் ரஜினிக்கு, படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி, அதனை வெற்றி பாதையில் கொண்டு வந்த இயக்குனர்களுக்கு, அப்படங்களின் தயாரிப்பாளர்கள் விலையுயர்ந்த கார்களை பரிசளிப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. அந்த வகையில், எத்தனை இயக்குனர்கள், தங்களின் தயாரிப்பாளர்களிடம் இருந்து கார்களை பரிசாகப் பெற்றுள்ளனர் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

சிங்கம்-3

இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன சிங்கம் 3 படம், 110 கோடி வசூல் செய்து, வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரிக்கு ஆடம்பரமான டொயோட்டா பார்ச்சுனர் காரை பரிசளித்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில், 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசான தானா சேர்ந்த கூட்டம் படம், 90 கோடி வசூல் செய்ததை தொடர்ந்து, அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா பரிசளிக்கப்பட்டது.

கோமாளி

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் முதல் படமான கோமாளி, நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், 2019ல் ரிலீஸ் ஆகி எதிர் பாராத அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹோண்டா சிட்டி காரை பரிசளித்துள்ளார்.

க/பெ ரணசிங்கம் 

இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், 2020 ல் ரிலீசான க/பெ ரணசிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் விருமாண்டிக்கு, கேஜெஆர் ஸ்டுடியோஸ் சார்பாக மாருதி கார் ஒன்று பரிசளிக்கப்பட்டது.

விக்ரம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூரிய ஆகியோரின் நடிப்பில் 2022ல் ரிலீஸ் ஆஹி பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் விக்ரம். லோகேஷ் கனகராஜின் இந்த சாதனையை பாராட்டும் வகையில், விலையுயர்ந்த லெக்சஸ் காரை, கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு பரிசளித்தார்.

வெந்து தனிந்தது காடு

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்புவின் நடிப்பில், 2022ல் ரிலீசான வெந்து தணிந்தது காடு திரைப்படம் பிரமாண்ட வசூல் செய்தது. அதன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது 
படத்தின், படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு விலையுயர்ந்த புல்லட் பைக்கை பரிசளித்தார் ஐசரி கணேஷ். அதே போல், படத்தின் ஹீரோ சிம்புவிற்கு ஆடம்பரமான டொயோட்டா வெல்பயர் காரை பரிசளித்தார்.

சர்தார்

இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்திக் நடிப்பில், 2022ல் ரிலீசாகி வெற்றியை பெற்ற சர்தார் படம் வெற்றி பெற்றதையடுத்து, படத்தின் இயக்குனர் மித்ரனுக்கு விலையுயர்ந்த டொயோட்டா காரை பரிசளித்தார் படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார்.

மாமன்னன்

இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், நடிகர்கள் வடிவேலு, உதயநிதி மற்றும் பஹத் பாசில் நடிப்பில், 2023ல் ரிலீசான மாமன்னன் படம், மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை பரிசளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

ஜெயிலர்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் சூப்பர்ஸ்டார் நடிப்பில், சமீபத்தில் ரிலீசான ஜெயிலர் திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்தது. 240 கோடியில் உருவான இந்த படம், 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்காக, நடிகர் ரஜினிக்கு, BMW X7 காரை பரிசளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஆனால், படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு, படத்தின் தயாரிப்பாளர் சார்பாக எந்த பரிசும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.