”சூரியா படம் போட்டு பை விநியோகம்? ” பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் செய்த செயல் என்ன தெரியுமா..?

”சூரியா படம் போட்டு பை விநியோகம்? ”   பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள்   செய்த செயல் என்ன தெரியுமா..?

பழனி உழவர் சந்தை முன்பாக பொதுமக்களுக்கு சூர்யா ரசிகர் மன்றத்தினர் துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  திண்டுக்கல் மேற்கு மாவட்ட நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் சார்பில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர் மன்றம் சார்பில், கடந்த சில நாட்களாக பழங்குடியினர் மக்களுக்கு மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கபட்டு வருகிறது.

மேலும், இ-சேவை மையம் அமைத்து தரப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இன்றும்  பழனியில் உள்ள உழவர் சந்தை முன்பாக காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி வருகின்றனர்.

பிளாஸ்டிக் (நெகிழி) பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்கள் வழங்கிய பையில் “நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தும் விதமாக 

“ முற்றிலுமாக நெகிழியை முடக்கப் பழக வேண்டும் என்றும், நாளை  நமது  குழந்தைகள் வாழ உலகம் வேண்டும் “ என்றும், இது மொபைல் ஃபோனை விட லேசானது என்றும், எனவே இவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை ஒழிக்கலாம் எனவும் அறிவுருத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

மேலும் பொதுமக்களுக்கு இலவசமாக உழவர் சந்தைக்கு வந்த 400 பேருக்கு துணிப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர்களின் பிறந்தநாளன்று கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் போஸ்டர்கள் ஒட்டியும் கொண்டாடும் ரசிகர்களுக்கு மத்தியில் சமூக நலனுக்காக மக்கள் வாழ்வில் பெரும் ஆபத்தாக இருக்கும் நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி ரசிகர்கள் கொண்டாடுவது புது உணர்வையும் அளித்து, தனது ரசிகர்களை நல்வழிப்படுத்தும் நோக்கமும் புலப்படுகிறது. அடுத்த தலைமுறையினர் சமூக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இதையும் படிக்க    | "தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மீண்டும் வரிச்சலுகை" திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை!