"சூப்பர் ஸ்டார் என்பது வெறும் டைட்டில்தான்" - சரத்

"சூப்பர் ஸ்டார் என்பது வெறும் டைட்டில்தான்" - சரத்

சூப்பர் ஸ்டார் என்பது வெறும் டைட்டில் தான் என்றும் பட்டத்தை பார்க்காதீர்கள் மனிதனை பாருங்கள் என்றும் நடிகர் சரத்குமார் காட்டத்துடன் கூறியுள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில், வாரிசு திரைப்பட நன்றி விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற நடிகர் சரத்குமார், நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டார்.  நிகழ்ச்சிக்குப் பின் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  சூப்பர் ஸ்டார் என்பது வெறும் டைட்டில் தான் என்றும், பட்டத்தை பார்க்காதீர்கள், மனிதனை பாருங்கள் என்றும் சரத்குமார் காட்டத்துடன் கூறினார்.