'ஷூட் பிகின்ஸ்'... கையில் துப்பாக்கியுடன் போட்டோ வெளியிட்ட சிம்பு...

துப்பாக்கி செண்டிமெண்ட் - கையில் துப்பாக்கியுடன் அடுத்த திரைப்பட புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு

'ஷூட் பிகின்ஸ்'... கையில் துப்பாக்கியுடன் போட்டோ வெளியிட்ட சிம்பு...

மாநாடு திரைப்படம் தமிழகத்தை கடந்து பல மாநிலங்களில் வெற்றி நடைபோட்டுவருகிறது. வெளியான ஒரே வாரத்தில் ஐம்பது கோடி கிளபில் இணைந்த மாநாடு சிம்புவின் திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாகவே மாறிப்போனது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த சிம்புவிற்கு இந்த வெற்றி இன்றியமையாத ஒன்று என்று திரைதுரையினாரால் பேசப்பட்டு வந்தது.

மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு சில படங்களில் நடித்து வந்தாலும் மிகவும் எதிர்பார்ப்புகுறிய திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தினை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப் பட்டது. இப்படத்தின் ஒரு பகுதி படபிடிப்பு ஏற்க்கனவே முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட படபிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

அதை தனது ரசிகர்களிடம் தெரிவிக்கும் பொருட்டு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து சிம்புவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ளதாகவும், படத்தின் ட்ரைலர் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் சிம்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இப்புகைப்படத்தை சிம்பு வெளியிட்டுள்ளதால், சிம்புவின் துப்பாக்கி சென்டிமென்ட் எனவும் நெட்டிசன்கள் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.