சிக்கனிலிருந்து பன்னீருக்கு மாறிய சிம்பு... இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

நடிகர் சிம்பு வீட்டில் பன்னீர் காளான் சமைக்கும் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிக்கனிலிருந்து பன்னீருக்கு மாறிய சிம்பு... இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

சிம்பு தற்போது உடலை குறைத்து மிகவும் ஃபிட்டாக மாறியுள்ளார். தற்போதெல்லாம் சிம்பு கேமராவுக்கு பின் செய்யும் சிறுசிறு விஷயங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் சிம்பு நாய்குட்டியுடன் உரையாடும் வீடியோ இணையத்தைக் கலக்கியது. தற்போது சிம்பு தனது வீட்டில் பன்னீர் காளான் சமைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, சிக்கனிலிருந்து பன்னீருக்கு மாற்றியுள்ளேன்" என்று caption போட்டுள்ளார். 

இதற்கிடையில் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.