கணவருக்கு நச்சுன்னு உதட்டில் இச்சு கொடுத்த ஸ்ரேயா...வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே...!

கணவருக்கு நச்சுன்னு உதட்டில் இச்சு கொடுத்த ஸ்ரேயா...வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே...!

எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த சிவாஜி திரைப்படம் முக பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாது விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.

அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும் படங்கள் ஏதுவும் இல்லை என்றே கூறலாம். ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிகளான இருவரும் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவர்.

அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் பரவி வைரலாகும். இந்தநிலையில் தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கோவாவிற்கு சென்ற ஸ்ரேயா, தனது கணவருக்கு லிப் கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கமெண்டுகளை அல்லி வீசி வருகின்றனர்.