ஒன்றானுந் தீச்சொல்: இயக்குனரின் மனைவியிடம், பொது மேடையில் அநாகரிகமாக பேசிய ஷாருக்!!

ஒன்றானுந் தீச்சொல்: இயக்குனரின் மனைவியிடம், பொது மேடையில் அநாகரிகமாக பேசிய ஷாருக்!!

ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, தீபிகா படுகோன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதியன்று வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 30ம் தேதி, சென்னையில் நடந்தது. இந்த விழாவில், திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

ஆரம்பத்தில் விழா நன்றாக நடந்துகொண்டிருந்தாலும், நடிகர் ஷாருக் கான் மேடையில் பேசிய சர்ச்சைப் பேச்சால், பலரும் முகம் சுளித்தனர். ஷாருக் கான் மேடையில் ஏறி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அட்லீயின் மனைவி பிரியாவிடம், "அடுத்ததாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். நாம் இருவரும் இல்லை, நீங்களும் அட்லீயும்; நாம் இப்பொழுது நண்பர்களாகிவிட்டோம். வேண்டுமென்றால், Co-Produce (இணை தயாரிப்பு) செய்கிறேன்" என அநாகரிகமாக பேசினார். ஷாருக்கானின் இந்த அநாகரிக பேச்சால், அங்கிருந்தவர்கள் சிரித்துக்கொண்டிருந்தாலும், பின்னர் சலசலப்பு இருந்துள்ளது. 

இந்நிலையில், அட்லீ மேடையில் பேசும் பொழுது, ஜவான் படத்தை எனது குழந்தையாக பார்க்கிறேன் குறிப்பிட்டிருந்தார். அதனால், ஷாருக் கான் அதனை குறிப்பிட்டு தான், அவ்வாறு பேசியுள்ளார் என, ரசிகர்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.

ஷாருக்கானின் இந்த சர்ச்சைப் பேச்சு புதிதல்ல. 2009-ல் நடந்த விழா ஒன்றில், திரை பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவை ஷாருக் கான் மற்றும் சைப் அலி கான் தொகுத்து வழங்கினர். அப்பொழுது, மேடையில் இருந்த இருவரும், கீழே அமர்ந்திருக்கும் சக நடிகர்களை அவமதிப்பது போன்ற ஒரு விளையாட்டை விளையாடினார்கள். அப்பொழுது, நடிகர் நீல் நிதின் முகேஷை பார்த்து, எங்களுக்கு துணைப்பெயராக கான் இருப்பது போல், ஏன் உங்கள் பெயரில் துணைப் பெயர் இல்லை? என கேள்வி எழுப்பியிருந்தார். 

அதனை முதலில் எதிர்கொள்ள தயங்கிய நீல், பின்னர், " நீங்கள் கேட்ட கேள்வி என்னை மிகவும் அவமானப்படுத்தியது. எனது தந்தையும் இங்கு அமர்ந்திருக்கிறார். இது சரியல்ல. அதனால், வாயை மூடிக்கொள்ளுங்கள் (Shut up) என பதிலடி கொடுத்திருந்தார்.

அதே விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவனும் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுது, ஷாருக் கான், மாதவனிடம் தமிழில் எதாவது கற்றுக்கொடுங்கள் என்று அவமானப்படுத்த முயற்சித்தபொழுது, "போங்க டா கிறுக்கு கதாநாயகங்களா" என நெற்றியில் அடித்தவாறு கூறியிருந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றும் சமூக செயலிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

"ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
  நன்றாகா தாகி விடும்."

என்ற குரலுக்கு ஏற்ப, ஒரே ஒரு தீய சொல்லை கூறிவிட்டோமானால் , இது வரை நாம் சேர்த்த மரியாதையும், மானமும் காற்றில் பறந்துவிடும். அதனால், அவரின் இந்த ஒரு சொல், இந்த அழகிய விழாவையும் அலங்கோலப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட்... கைது ஆகிறார்களா?