சமந்தா எனக்கு அக்கா போன்றவர்....அவரை நான் ஜிஜி என்று தான் அழைப்பேன்..... ப்ரீத்தம் விளக்கம்

சமந்தா என் அக்கா போன்றவர், அவரையும் என்னையும் வைத்து தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீர்கள் என்று அவரது டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.

சமந்தா எனக்கு அக்கா போன்றவர்....அவரை நான் ஜிஜி என்று தான் அழைப்பேன்.....  ப்ரீத்தம் விளக்கம்

சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் ஆடைவடிவமைப்பாளரான ப்ரீத்தம் ஜுகல்கர்தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் இது குறித்து ஆடை வடிவமைப்பாளராக ப்ரீத்தம் கூறியதாவது.

நான் சமந்தாவை ‘ஜிஜி‘ என்று அழைப்பேன் என்றும் ஜிஜி என்றால் சகோதரி என்று அர்த்தம் என கூறிய அவர், சகோதரியாக நினைக்கும் ஒருவருடம் நான் எப்படி தொடர்பு வைத்திருக்க முடியும் என்றார்.

எனக்கு நாக சைதன்யாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும். எனக்கும் சமந்தாவுக்குமான உறவுமுறை என்னவென்று அவருக்கும் தெரியும். சமந்தாவையும், என்னையும் சேர்த்து வைத்து பேச வேண்டாம் என்று சைதன்யா கூறியிருக்கலாம். ஆனால் அவர் இந்த விஷயத்தில் ஏதுவும் பேசாமல் இருப்பது எனக்கு மிகுந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தவறாக பரவும் வதந்தி குறித்து சைதன்யா ஒரு அறிக்கை கொடுத்து இருந்தால் மக்கள் கட்டுக்குள் இருந்து இருப்பார்கள், அனால் அவர் அப்படி செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.