வெப் சீரிஸில் நடிக்கும் SJ சூர்யா.. மிரள வைக்கும் பட்ஜெட்!

வெப் சீரிஸில் நடிக்கும் SJ சூர்யா.. மிரள வைக்கும் பட்ஜெட்!

SJ சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம் விமர்சனங்களை பெற்றாலும் அவரின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது மாநாடு மற்றும் டான் 2 படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். மேலும் கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இவ் வெப்சீரிஸ் இயக்க உள்ளார். இதனை புஷ்பகாயத்ரி தயாரிக்க உள்ளார். இதுவரைக்கும் எந்த வெப்சீரிஸ் எடுக்காத அளவிற்கு மிகப் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதற்காக சுமார் 40 கோடி அளவில் பட்ஜெட்டில் வெப் சீரிஸ் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் தற்போது படப்பிடிப்பிற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெப்சீரிஸ் பெரிய அளவில் பேசப்படும் எனவும் படக்குழு கூறிவருகின்றனர்.