மீண்டும் இணைந்த ‘அசுரன்’ கூட்டணி.. வைரல் புகைப்படம்

அசுரன்’ படத்தில் மகனாக நடித்திருந்த கென் கருணாஸ், மீண்டும் இரண்டாவது முறையாக தனுஷுடன் கூட்டணி அமைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மீண்டும் இணைந்த ‘அசுரன்’ கூட்டணி.. வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் 44-வது படம் தான் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இயக்கி உள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி,இப்படத்தில்’அசுரன்’ படம் மூலம் பிரபலமான நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்த நிலையில்,  தற்போது படப்பிடிப்பு தளத்தில் கருணாஸ், கென் உடன் தனுஷ் எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்த கென் கருணாஸ், மீண்டும் இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.