'83' படத்தை பார்த்து ரஜினி பாராட்டு.. வைரல் ட்வீட்

தமிழில் ரிலீஸ் செய்த 83 படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.

'83' படத்தை பார்த்து ரஜினி பாராட்டு.. வைரல் ட்வீட்

ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம் ரிலீசாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி  உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியானது. இந்த படம் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியானது. 

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ரோலில் தமிழ் நடிகர் ஜீவாவும், கபில் தேவாக நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதில் கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். 


இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ஸ்டார் ரஜினிகாந்த் டிவிட்டரில் இது பற்றி பதிவு செய்துள்ளார். அதில், கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் 83 படக்குழுவினரை டேக் செய்து "என்ன ஒரு அருமையான படம்! பிரம்மிக்க தக்க படம்" என ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.