கவர்ச்சி பாதி, ஹாரர் மீதி.. ராய் லக்ஷ்மியின் சிண்ட்ரெல்லா வைரலாகும் ட்ரைலர்

கவர்ச்சி பாதி, ஹாரர் மீதி.. ராய் லக்ஷ்மியின் சிண்ட்ரெல்லா வைரலாகும் ட்ரைலர்

ராய் லக்ஷ்மி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். இவர் நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் கிடைக்கும் படம் தான் சிண்ட்ரெல்லா.

அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவின் உதவியாளர். எஸ் எஸ் ஐ புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி நகரும் வகையில் கதை.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 24 திரை அரங்கில் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.