"அஜித்தை பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது" ? மேடையில் ஆவேசமாக பேசிய ஆர்கே சுரேஷ்!

’விசித்திரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சினிமா விமர்சகர்கள் சிலரை ஆவேசமாக தாக்கி பேசிய ஆர்கே சுரேஷ்...

"அஜித்தை பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது" ? மேடையில் ஆவேசமாக பேசிய ஆர்கே சுரேஷ்!

நடிகரும், தயாரிப்பாளரும் ஆன  ஆர்கே சுரேஷ் தற்போது அவரே நடித்து தயாரித்த படம் தான் ‘விசித்திரன்’. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட ஆர்கே சுரேஷ், சில சினிமா விமர்சகர்களை ஆவேசமாக தாக்கி பேசியுள்ளார். அது மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ‘அஜித் சாரை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது என்றும், சினிமாவை நம்பி இருப்பவர்களுக்கு சுத்தமாக அருகதை கிடையாது என்றும் அவர் கூறினார். நான் ’விசித்திரன்’ என்று ஒரு படத்தை எடுத்து உள்ளேன் என்றும், இந்த படம் மட்டும் சரியில்லை என்று சொன்னால் நான் சினிமாவை விட்டே போகிறேன் என்று கூறினார்.

மேலும் ’நீ யாருடா அஜித்தை பற்றி பேசுவதற்கு என்றும், அஜித்தை பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கூறிய ஆர்கே சுரேஷ் ’விசித்திரன்’ படத்திற்காக 30 கிலோ எடை கூடி இருக்கிறேன் மற்றும் குறைந்திருக்கிறேன் என்றும், அந்த படத்தில் எனது 6 மாத உழைப்பு இருக்கிறது என்றும் கூறினார்.

அதேசமயம் தயவுசெய்து ஒருவருடைய உடல், கலர் ஆகியவற்றை விமர்சனம் செய்யாதீர்கள் என்றும், அவ்வாறு விமர்சனம் செய்வது தாயை விமர்சனம் செய்வதற்கு சமம் என்றும் ஆர்கே சுரேஷ் ஆவேசத்துடன் அந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.