புஷ்பா வெளியான 50 நாட்களிலேயே இவ்வளவு கோடி வசூல் சாதனையா...!

புஷ்பா வெளியான 50 நாட்களிலேயே இவ்வளவு கோடி வசூல் சாதனையா...!

ஐந்து மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியான ஐம்பது நாட்களிலேயே 365 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவே  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியான ஐம்பதே நாட்களில் நாடு முழுவதும் 365 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால்  கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூலான திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது புஷ்பா திரைப்படம்.