தமன்னா ரேஞ்சுக்கு கோல்ட் காஸ்ட்யூமில் பள பளவென ஜொலிக்கும் ப்ரியா..! வைரலாகும் போட்டோஷூட்...!

ப்ரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்...!

தமன்னா ரேஞ்சுக்கு கோல்ட் காஸ்ட்யூமில் பள பளவென ஜொலிக்கும் ப்ரியா..! வைரலாகும் போட்டோஷூட்...!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர், ஆரம்பத்தில் ’செய்தி வாசிப்பாளராக’ அறிமுகமாகி, பின்னர் தனியார் தொலைக்காட்சி மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றிய பிரியா பவானி சங்கர்  ‘மேயாதமான்’ படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். பிறகு  படிபடியாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து உள்ளார். இவர் தற்போது தனுஷுடன் 'திருச்சிற்றம்பலம்’ சிம்புவுடன் ’பத்து தல’ அருண் விஜய் உடன் ’யானை’ ராகவா லாரன்ஸ் உடன் ‘ருத்ரன்’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியாவுக்கு சோஷியல் மீடியா பக்கங்களான இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாகவே கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்துவருகிறார். 

இந்நிலையில் சற்றுமுன் தமன்னா பாணியில் அட்டகாசமான கிளாமர் புகைப்படம் ஒன்றை கோல்ட் காஸ்ட்யூமில் ப்ரியா பவானிசங்கர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர், டக்குன்னு பார்க்கும்போது தமன்னாதான் என்று நினைத்துவிட்டோம் என கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.