2026-ல் முதலமைச்சராக....விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

2026-ல் முதலமைச்சராக....விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று மதுரையில் ஆங்காங்கே அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேட்சையாக களம் காண்கின்றனர்.

அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிடுகின்றனர். சில இடங்களில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அடித்து சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 

2024 ஆம் ஆண்டு மதுரையில் முதல் மாநாடு, 2026 இல் முதலமைச்சராக"என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மற்றொரு போஸ்டரில் 'தமிழக அரசியலின் மொத்த உருவமே' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதே போல் 2021இல் உள்ளாட்சி, 2026இல் நல்லாட்சி என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.