நெல்சனிடம் அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்... ”நீங்களுமா?” கேள்வி எழுப்பும் விஜய் ரசிகர்கள்!

விஜய்யின் ‘பீஸ்ட்’ பட அப்டேட்டை பிரபல இயக்குனர் லோகேஷ்கனகராஷ் கேட்டதால் ‘’நீங்களுமா?” என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெல்சனிடம் அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்... ”நீங்களுமா?” கேள்வி எழுப்பும் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவை பொறுத்தமட்டிலும் மாஸ் ஹீரோக்களின் படம் வரப்போவதை படக்குழுவினர் உறுதி செய்துவிட்டால் போதும், அப்டேட் எங்கே என்று தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி கொண்டிருப்பார்கள். அதுவும் விஜய், அஜித்-னா சும்மா விடுவாங்களா நம்ம புள்ளைங்க...

இப்படி தாங்க கடந்த இரண்டு ஆண்டுகளாக ’வலிமை’ படத்தின் அப்டேட் எங்கே என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

அதேபோன்று தான் தற்போது கடந்த சில வாரங்களாகவே ‘பீஸ்ட்’ படத்தின் எந்த அப்டேட்டும் வராத நிலையில் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை போலவே பின்பற்றி  பலரிடம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ என கேட்டிருந்தார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ‘நீங்களுமா? என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.