நீச்சல் உடையில் பூனம் பஜ்வா....ரசிகர்கள் உற்சாகம்...

நடிகை பூனம் பஜ்வா நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது

நீச்சல் உடையில் பூனம் பஜ்வா....ரசிகர்கள் உற்சாகம்...

இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடித்து வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதனை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு,  ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திடீரென இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வந்தார். தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர்,  தமிழில் கடைசியாக ஜிவி பிரகாஷூடன் குப்பத்துராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். என்றும் இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பஜ்வாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

படவாய்ப்புகள் இல்லை என்றாலும் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, தற்போது நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.