தனுஷ் ஜோடியாக பூஜா ஹெக்டே? 

தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் ஜோடியாக பூஜா ஹெக்டே? 

தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது முன்னணியில் உள்ள நடிகை பூஜா ஹெக்டே, ஒரு படத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் பரவி வருகிறது.

தமிழில் விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்திலும் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்திற்காகத்தான் பூஜாவிடம் பேசி வருகிறார்களாம். 

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தனுஷ் மிகவும் பிஸி என்கிறார்கள் கோலிவுட்டில். அந்தப் படங்களை முடித்த பிறகு மீண்டும் இயக்குனராக ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையும் தனுஷுக்கு உள்ளதாம்.