சஞ்சய் கையில் மைக், ஃ போக்கஸ் லைட்... தீயாய் பரவும் விஜய்யின் மகன் புகைப்படம்!!

சஞ்சய் கையில் மைக், ஃ போக்கஸ் லைட்... தீயாய் பரவும் விஜய்யின் மகன் புகைப்படம்!!

கோலிவுட்டின் முன்ணனி நடிகராக வலம் வருபவர் விஜய்.  தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். 

விஜய் என்ன செய்தாலும் அவரைக் குறித்த எந்த தகவல் வெளிவந்தாலும் அவரது ரசிகர்கள் வைரலாக்குவர். விஜய்யின் படங்கள் வெளியே வந்தாலே அன்று ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தான்.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். அவர் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். சஞ்சய் சிறுவயதிலேயே அவரது அப்பாவுடன் ஹிட் பாடல்களில் நடனமாடி பிரபலமானவர். மேலும் தளபதி விஜய்யை போலவே சஞ்சய் குறித்த எந்த தகவலாக இருந்தாலும் இணையத்தில் தீயாய் பரவும்.

சஞ்சய்க்கு சினிமா டைரக்டராக வேண்டும் என்பது ஆசையாம். மேலும் சமீபத்தில் அவர் டாப் ஹீரோவை வைத்து படம் இயக்க போவதாக தகவல் பரவியது. இந்த நிலையில் சஞ்சய் கையில் மைக், ஃ போக்கஸ் லைட் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உடனே நெட்டிசன்கள் களமிறங்கியாச்சா! டைரக்டராக தயாராகி விட்டார் எனக் கூறி வருகின்றனர்.