நம் மக்கள்..... நம் கதை.... நம் மொழி..... ஆஸ்கருக்காக படம் எடுக்க வேண்டாம்..! - இயக்குனர் வெற்றிமாறன்.

நம் மக்கள்.....  நம் கதை....  நம் மொழி..... ஆஸ்கருக்காக படம் எடுக்க வேண்டாம்..! - இயக்குனர் வெற்றிமாறன்.

நம் கதையை, நம் மக்களுக்காக, நம் மொழியில் உணர்வுகளை பிரதிபலித்து படங்கள் எடுப்பதால் தான் நாம் இந்தளவுக்கு வெற்றகளை பெற முடிந்துள்ளது என இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் "ஆஸ்கருக்கு விருது பெறுவதற்கு படம் எடுப்பதற்கு பதில் நமது மொழியில், நமது உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வது தான் ஒரு படத்தின்  உண்மையான வெற்றி. கலை எல்லையைக் கடந்து போகக்கூடியது. ஒரு பொது மனிதன் பல விதமான உலகத்தையும் நேரத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழலை கலை உருவாக்கியது" எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், கோவிட்டுக்குப் பிறகு உண்மையில் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர் என்றும் "இதுவரை தங்களது மண் தாண்டிய ரசிகர்களை டார்கெட் செய்து படங்கள் உருவாக்கப்படவில்லை. இது அவர்களுக்கான கலாச்சாரம் இல்லை, பொது ரசிகர்களுக்கான படம் எடுப்பதில் தோல்வியடைந்தோம். ஆனால், இப்போது கலாச்சாரங்களைத் தாண்டி, எல்லைகளைத் தாண்டியும்  கலை செல்கிறது", எனவும் குறிப்பிட்டார்.

 இதையும் படிக்க | பேனா நினைவு சின்னம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு...!

மேலும், "ஆஸ்கர் விருது பெறும் படங்கள் எடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர், ஆஸ்கருக்காக படம் எடுக்க வேண்டாம். நம் கதையை நாம் எடுத்து, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்" எனவும் தென்னிந்திய சினிமா வசூல் அதிகரித்திருப்பதற்கும், தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் காரணம் நம் கதையை, நம் மக்களுக்காக, நம் மொழியில் உணர்வுகளை பிரதிபலித்து படங்கள் எடுப்பதால் தான் நாம் இந்தளவுக்கு வெற்றகளை பெற முடிந்துள்ளது எனவும் கூறினார்.

 இதையும் படிக்க | இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரரை...பேருந்தில் ஏற்றாமல் மிரட்டல் விடுத்த நடத்துனர்!வைரலான வீடியோ!!