அய்யோ.. என்னது 500 கோடி வசூலா!! மூன்றே நாட்களில் "RRR " படைத்த மெகா சாதனை!!

உலகம் முழுவதும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மூன்றே நாட்களில் ரூபாய் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.

அய்யோ.. என்னது 500 கோடி வசூலா!! மூன்றே நாட்களில் "RRR " படைத்த மெகா சாதனை!!

இந்திய சினிமா ரசிகர்கள் கிட்டத்தட்ட 3 வருடங்கள் காத்திருந்த ஆர்.ஆர்.ஆர்.. அதாவது  (இரத்தம் ரணம் ரௌத்திரம்) கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ’ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்.

இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் பிரமாதமான புரமோஷன் பணிகள் காரணமாக இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் ரிலீஸான முதல் நாளில் உலகம் முழுவதும் 257 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்று நாட்களில் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.